தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள பால்வண்ணநாதர், செளடேஸ்வரி சமேத சடையப்பநாதர், காளிகாம்பாள் பரமேஸ்வரர் கோயில்களில் மாசி மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மகாசிவராத்திரியை முன்னிட்டு பாலக்கோட்டில் எழுந்தருளி உள்ள செளடேஸ்வரி சமேத சடையப்பநாதர் கோயில், பால்வண்ணநாதர் கோயில், காளிகாம்பிகை சமேத பரமேஸ்வரர் கோயில் ஆகிய திருக்கோயில்களில் நான்கு கால வேள்வியுடன் சிறப்பு பூஜையும், உற்சவருக்கு, சிறப்பு அலங்காரம், மற்றும் தீபாராதனைகள் நடை பெற உள்ளது, அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக