நிகழ்ச்சிக்கு திமுக மாவட்ட பொருளாளர் முருகன், மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், அரசு வழக்கறிஞர் முருகன், மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியிட் தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வியின் அவசியம் குறித்து பேசினார்.
மேலும் பள்ளி கல்வியில் சிறந்து விளங்குவதுடன் பள்ளி கல்வியை முடித்து அனைவரும் உயர் கல்வியில் சேர்ந்து கல்வி தகுதியை மேம்படுத்தி வளர்ச்சி பெற கேட்டுக் கொண்டனர். அதனை தொடர்ந்து +2 தேர்வு எழுத உள்ள 544 மாணவ - மாணவிகளுக்கு எழுதுபொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் சரவணன், ரூஹித், சாதிக்பாஷா, மோகன், ஜெயந்திமோகன், வகாப்ஜான், மசியுல்லா, திமுக கிளை செயலாளர்கள் கணேசன், மியான், படவட்டை, உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக