தர்மபுரி மாவட்டம், தர்மபுரி ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலையில் கர்த்தாரஅள்ளியில் சுங்க சாவடி அமைக்ப்பட்டுள்ளது, சாலை பணிகள் நிறைவடையாத நிலையில் திடிரென எந்த அறிவிப்பும் இன்றி, கட்டண விபரங்கள் குறித்த அறிவிப்பு பலகைகள் எதுவும் வைக்கப்படாமல், நேற்று முன்தினம் 20ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டிற்க்கு வந்ததாக கூறி சுங்க சாவடி ஊழியர்கள் சுங்க கட்டணம் வசூலிக்க தொடங்கினார்.
இதில் தேசிய நெடுஞ்சாலையை முழுவதும் பயன்படுத்தும் வாகனங்களுக்கும், பாலக்கோடு சுற்றி உள்ள பகுதியில் உள்ள வாகனங்களுக்கும் ஓரே விதமான கட்டணம் வசூலிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்கள் மாவட்ட கலெக்டர் சதிஷ் அவர்களிடம் இன்று அளித்த கோரிக்கை மனுவில் பாலக்கோட்டில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட தலைநகரான தர்மபுரியில் உள்ள ஆட்சியர் அலுவலகம், மருத்துவமனை, எஸ்.பி. அலுவலகம் மற்றும் அன்றாட வேலை சம்பந்தமாக தினந்தோறும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் வணிக வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்வதை போல் பாலக்கோட்டில் இருந்து செல்லும் ஏழை ,எளிய பாமர மக்கள் செல்லும் வாகனங்களுக்கு கட்டாயம் சுங்க கட்டணம் என்பது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனவே பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிப்பதில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக