திமுக மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் - இந்தி திணிப்பை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 பிப்ரவரி, 2025

திமுக மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் - இந்தி திணிப்பை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றம்.

1002473620

வெள்ளிசந்தை தனியார் மண்டபத்தில் காரிமங்கலம் திமுக மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் - இந்தி திணிப்பை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றம்.


தர்மபுரி மாவட்டம், வெள்ளிசந்தை தனியார் மண்டபத்தில், காரிமங்கலம் திமுக மேற்கு  ஒன்றிய செயற்குழு கூட்டம் ஒன்றிய  அவைத் தலைவர் முனுசாமி தலைமையில் சனிக்கிழமை இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது.


வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர், ஒன்றிய பொருளாளர் செந்தில், ஒன்றிய துணை செயலாளர்கள் நடராஜ், சுமதி கோவிந்தன், மாவட்ட பிரதிநிதிகள் சுந்தரம், பெரியண்னன், கருப்பண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால்  செயற்குழு கூட்டத்தை துவக்கி வைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 4 ஆண்டுகால சாதனைகளை எடுத்துரைத்தார்.


அதனை தொடர்ந்து நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஒன்றிய பாஜக அரசு மும்மொழி கொள்கை திட்டத்தின் மூலம் இந்தி திணிப்பை கண்டித்தும், மார்ச் 1ம் தேதி முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு 1000 நபர்களுக்கு வேட்டி சேலை மற்றும் இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கிளை கழகங்கள் தோறும் கட்சி கொடி ஏற்றுதல், இளைஞர் அணி நிர்வாகிகளை தேர்வு செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இக்கூட்டத்தில் அணிகளின் மாவட்ட  அமைப்பாளர்கள் இளைஞர் அணி ஹரி பிரசாத், இராமமூர்த்தி,சக்தி,சலிம், குணா, துரைமுருகன், மாதேஸ்வரன், பார்த்தீபன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் சிதம்பரம், பெருமாள், சாதிக், தங்கவேல், மகேந்திரன், முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனிரத்தினம்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ, தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் வினோத்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்  திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad