பொதுமக்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ”சாலைப் பாதுகாப்பு மாதம்" கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் 01.01.2025 முதல் 31.01.2025 வரை கடைபிடிக்கப்பட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நிறைவு பகுதியாக தருமபுரி JCI அமைப்பின் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் முறையாக தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை இயக்கிய ஓட்டிகளுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது, மேலும் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தருமபுரி JCI அமைப்பின் சார்பில் அந்த அமைப்பின் தருமபுரி பிரிவு தலைவர் Jc.பாபு, முன்னாள் தலைவர்கள் Jc.ரவிக்குமார், Jc.விஜயகுமார், Jc. கணேஷ், Jc. யுவராணி, Jc. நிரோஷா, Jc. சுரேஷ், Jc. பிரசன்னா, Jc. ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக