தருமபுரி அடுத்து பைசுஹள்ளி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இயற்பியல் துறை சார்பாக இரண்டு நாள் தேசிய பயிற்சி பட்டறை இந்திய நிறமாலை இயற்பியல் சங்கத்துடன் இணைந்து ”மின்னணுவியல் உபகரணங்கள் மூலம் மின்னணுவியல் கற்றல்” என்ற தலைப்பில் நடைபெற்றது. இயற்பியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் செல்வா பாண்டியன் வரவேற்றார். இயக்குனர் பொறுப்பு முனைவர் மோகனசுந்தரம் தலைமையுரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக முனைவர் குணசேகரன் UJT ஐப் பயன்படுத்தி தளர்வு ஆஸிலேட்டரை வடிவமைத்தல் ” என்ற தலைப்பில் சிறுபுரையாற்றினார் முனைவர் வெங்கட்ராம ரெட்டி பேராசிரியர் செயல்பாட்டு பெருக்கியைப் பயன்படுத்தி ஒரு மான்ஸ்டபிள் மல்டிவைபிரேட்டரை வடிவமைத்தல்” என்ற தலைப்பில் விளக்கம் உரை நிகழ்த்தினார்.முனைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் முனைவர் செந்தில் ஆகியோர் பங்கேற்று பேசினர். இறுதியாக முனைவர் பிரசாத் நன்றியுரை நிகழ்த்தினார் முனைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் முனைவர் செந்தில் அவர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக