தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர். பானுசுஜாதா, பாலக்கோடு துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.மனோகரன் அவர்கள் ஆலோசனைப்படி காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பாலக்கோடு காவல் நிலைய சிறப்பு நிலை காவலர் யுயல்மூர்த்தி, முதல் நிலை காவலர் கோவிந்தசாமி மற்றும் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், உள்ளிட்ட குழுவினர் இணைந்து பாலக்கோடு பேருந்து நிலையம், தர்மபுரி ரோடு, எம்.ஜி. ரோடு, பைபாஸ் ரோடு பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டி பீடா கடைகள், மொத்த விற்பனை நிலையங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து கடைகளில் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் பாலக்கோடு பேருந்து நிலையத்தில், பீடா கடையை ஒட்டிய ஒரு வளையல் கடையில் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டது கண்டெடுத்து பறிமுதல் செய்தனர். மேலும் பாலக்கோடு புறவழிச்சாலையில் காவாப்பட்டி பிரிவு ரோடு ,பெட்ரோல் பங்க் எதிரில் ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கூல்லீப், ஹான்ஸ்,விமல்-வி1 புகையிலை உள்ளிட்டவை ஒரு கிலோ அளவுக்கு சுமார் ரூ.2000 மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டது.
நியமன அலுவலர்க்கு தகவல் அளித்து அவர் உத்தரவின் பேரில், மேற்படி புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகள் இயங்க 15 தினங்கள் தடை விதித்து உடனடி அபராதம் தலா ரூபாய்.25000 விதிக்கப்பட்டு கடையும், வளையல் கடையும் அடைக்கப்பட்டது. மேலும் பாலக்கோடு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.பாலசுந்தரம், உத்தரவுப்படி காவல் உதவி ஆய்வாளர் கோகுல் அவர்கள் மேற்படி கடை உரிமையாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து மேற்நடவடிக்கை தனியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆய்வின் போது பேருந்து நிலையத்தில் உள்ள குளிர்பான , பெட்டி பீடா கடைகள், தின்பண்டம் மொத்த விற்பனை நிலையங்கள், மற்றும் உணவகங்கள் ஆய்வு செய்ததில் காலாவதியான குளிர்பானங்கள், உரிய விபரங்கள் அச்சிடப்படாத தின்பண்டங்கள் இரண்டு கடைகளில் இருந்து அப்புறப்படுத்தி மேற்படி விற்பனையாளர்கள் இருவர்க்கும், மேலும் பேருந்து நிலையத்தில் ஒரு உணவகத்தில் மூலப் பொருட்கள் மற்றும் சமைத்த உணவுகள் முறையாக பராமரிக்காமல், திறந்த நிலையில் வைத்திருந்ததற்கு மேம்பாட்டு நோட்டீஸ் வழங்கி நியமன அலுவலர் மருத்துவர். பானுசுஜாதா உத்தரவுப்படி, உடனடி அபராதம் தலா ரூபாய் 1000 என மூன்று கடைகளுக்கு மூன்று ஆயிரம் அபராதம் கட்டிட சலான் வழங்கி, உரிய விதிமுறைகள், வழிமுறைகள் பின்பற்ற வலியுறுத்தி எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக