மாரண்டள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் - 25 ஆயிரம் ரூபாய் அபராதம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 8 பிப்ரவரி, 2025

மாரண்டள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் - 25 ஆயிரம் ரூபாய் அபராதம்.


தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, பாலக்கோடு  துணைக் காவல் கண்காணிப்பாளர் மனோகரன்  மற்றும் மாரண்டள்ளி தேர்வு நிலை பேரூராட்சி  செயல் அலுவலர் சசிகலா ஆகியோரின்  ஆலோசனைப்படி, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி, மாரண்டள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர்  தணிகாசலம்,  மாரண்டள்ளி தேர்வு நிலை  பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் தேன்மொழி ஆகியோர் அடங்கிய  குழுவினர் இணைந்து மாரண்டள்ளி  பேருந்து நிலையம், வெளிச்சந்தை ரோடு, பஞ்சப்பள்ளி சாலை, ராயக்கோட்டை சாலை, நான்கு ரோடு மற்றும்  சுற்றியுள்ள பகுதிகளில்  உள்ள மளிகை கடைகள், பெட்டி பீடா கடைகள்,  மொத்த விற்பனை நிலையங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை  குறித்து ஆய்வு செய்தனர். 


இந்த ஆய்வில்  பஞ்சப்பள்ளி சாலையில் கவுனுர் பிரிவு ரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள, பீடா கடையில்  சோதனை செய்ததில் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்  ஹான்ஸ்,விமல் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டெடுத்து பறிமுதல்  செய்தனர். நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜா உத்தரவின் பேரில், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும்,  15 நாட்கள் கடை இயங்க தடை விதித்து சீல் வைத்தனர்.


மேலும் பேருந்து நிலையத்தி கலப்பட தேயிலை பயன்படுத்தியதை கண்டறிந்து  ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பேருந்து நிலையத்தில் குளிர்பான கடை மற்றும் நான்கு ரோடு பகுதியில் இரண்டு குளிர்பான  கடைகள் என 3 கடைகளுக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த ஆய்வில் மொத்தம் 5 கடைகளுக்கும் 29 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad