தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீபுதூர் மாரியம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் பெளர்ணமியை முன்னிட்டு நடைபெறுவது வழக்கம். இக் திருவிழாவானது ஜனவரி மாதம் 31ம் தேதி கொடியோற்றத்துடன் துவங்கியது. திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் இத் திருவிழாவின் முக்கிய நாளான இன்று பாலக்கோடு, பனங்காடு, மேல்தெரு, புதூர், கல்கூடப்பட்டி, குப்பன் கொட்டாய், வாழைத்தோட்டம், செங்கோடப்பட்டி, மணியகாரன் கொட்டாய், ரெட்டியூர், சித்திரப்பட்டி, காவாப்பட்டி ஆகிய 12 கிராம மக்கள் ஒன்றிணைந்து திருவிழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
இத்திருவிழாவில் உள்ளூர், வெளியூர், வெளி மாநிலத்திலிருந்து இலட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், பூ கரகம் எடுத்தல் அம்மன்வேடம், காளிவேடம் அணிந்தும், கிரேனில் அந்தரத்தில் தொங்கியபடி சென்றும் காவடி ஆட்டம், கோல் ஆட்டம், கரகாட்டம், என சண்டை மேளம் முழங்க மாவிளக்கு தட்டுடன் திரெளபதி அம்மன் கோயிலில் இருந்து ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோயில் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு நடந்து சென்று ஶ்ரீபுதூர்மாரியம்மன் கோவிலை அடைந்து, கிடா, கோழி பலியிட்டு நேர்த்தி கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.
இத்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் பாலக்கோடு தாலுக்காவிற்க்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக