மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரடியாக களஆய்வு மேற்கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து, காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க ஒப்புதல் வழங்கி, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்துப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பேகாரஅள்ளி வருவாய் கிராமத்திற்குட்பட்ட பட்டகப்பட்டி கிராமத்தில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.02.2025) நேரடியாக களஆய்வு மேற்கொண்டு, இதுகுறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தகுதிவாய்ந்த பொதுமக்கள் விடுபடா வகையில், பட்டாக்கள் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பேகாரஅள்ளி அங்கன்வாடி மையத்தையும், பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடும் முகாமினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், குழந்தைகளின் ஊட்டச்சத்து உறுதி செய்திடும் வகையில் வயதிற்கேற்ற உயரம் மற்றும் எடை அளவுகள் சரியாக உள்ளதா என்பதை பார்வையிட்டார்.
பின்னர், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பேகாரஅள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்து, பள்ளி மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்வுகளின்போது, தருமபுரி கோட்டாட்சியர் திருமதி.இரா.காயத்ரி, காரிமங்கலம் வட்டாட்சியர் திரு.கோவிந்தராஜ், காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சர்வோத்தமன் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக