இச்சூழ்நிலையை பயன்படுத்தி முன்பட்ட கரும்பு நடவு செய்துள்ள விவசாயிகள் ஆலை மூலமாக தேவையான கரும்பு பருநாற்றினை எடுத்து நடவு செய்து நல்ல முறையில் பராமரித்து வரும் நிலையில் இப்பயிர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் உரம் வைத்திட அனைத்து அங்கத்தினர்களும் தத்தமது கோட்ட களப்பணியாளர்களிடம் அறிவுரைப்பெற்று உரம் வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தற்போது நடுப்பட்ட நடவு பருவம் துரிதமாக நடைப்பெற்று வரும் நிலையில்: அங்கத்தினர்கள் தமக்கு தேவையான விதைக்கரும்பு, பருநாற்று ஏற்கனவே களப்பணியாளர்களிடம் முன்பதிவு செய்தபடி பெற்று நடவு செய்து வருகின்றனர். தற்போது ஆங்காங்கே நெற்பயிர்கள் அறுவடை துவங்கியுள்ள நிலையில் கரும்பு பயிரிட தமக்கு தேவையான விதைக்கரும்பு மற்றும் பருநாற்றுகள் சம்மந்தப்பட்ட கோட்ட களப்பணியாளர்கள மூலமாக பதிவு செய்யப்பட்டு நடவு பணிகள் நடைபெற்று வருகின்றது.
மேற்கண்ட பட்டங்களில் ஒருபரு கரணை மற்றும் பருநாற்று நடவு செய்துள்ள அங்கத்தினர்கள் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அரசு மானியம் பெற்றிட தேவையான ஆவணங்களை சம்மந்தப்பட்ட களப்பணியாளர்களிடம் ஒப்படைத்து பயன்பெற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நடுப்பட்ட இறுதியிலும் பின்பட்ட மற்றும் சிமூலமாகவோ அல்லது கோட்ட அலுவலகங்கள் / தலைமை அலுவலகம் மூலமாக தேவை குறித்தான காலத்தினை குறிப்பிட்டு பிப்ரவரி 28-ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கரும்பு நடவுப்பணிக்கு தேவையான விதைக்கரும்பு மற்றும் பருநாற்றுகள் காலத்தே. சென்றடையும். வகையில் சகோதர ஆலைகளிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் பயன்பாட்டில் உள்ள நிழல்வலைக் கூடங்கள் மூலமாகவும், கரும்பு பருநாற்றுகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அனைத்து கரும்பு பயிரிடும் விவசாயிகள்/அங்கத்தினர்கள் இவ்வாய்ப்பிணை பயன்படுத்திக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
2024-25 அரவைக்கு கரும்பு பதிவு செய்துள்ள அனைத்து வயல்களுக்கும் வெட்டு உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில் கோட்ட அலுவலகங்கள் மூலமாக தெரிவிக்கப்பட்ட காலகெடுவிற்குள் பதிவு கரும்பினை வெட்டி அரவைக்கு அனுப்பிடவும் விவசாய அங்கத்தினர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மாவட்ட வருவாய் அலுவலர் / செயலாட்சியர் திருமதி.பிரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக