பாலக்கோட்டில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி - பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

பாலக்கோட்டில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி - பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கேடு ஒன்றியம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின்  2ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய இணை செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் சிவக்குமார், பேரூர் கழக செயலாளர் விக்னேஷ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் முருகன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கட்சி தொண்டர்கள் பைபாஸ் சாலையில் உள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி அலுவகத்தில் இருந்து பட்டாசுக்கள் வெடித்தும், மேளதாளங்களுடன், கட்சி கொடி ஏந்தி  கடைவீதி வழியாக ஊர்வலமாக சென்று பாலக்கோடு பேருந்து நிலையத்தின் முன்பு கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழாவை  கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.


இந்நிகழ்ச்சியில் ஒன்றிய மகளிர் அணி இணை அமைப்பாளர் ஜோதி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜெயபிரகாஷ், நகர தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மணிகண்டன், நகர வர்த்தக அணி அமைப்பாளர் நியாமத் பாலக்கோடு பிரபு மற்றும் வழக்கறிஞர் அணி உள்ளிட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad