குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் தைப்பூச தேர்திருவிழா: பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுத்து தேரோட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 பிப்ரவரி, 2025

குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் தைப்பூச தேர்திருவிழா: பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுத்து தேரோட்டம்.


தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு சிவசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழா  கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது


திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று காலை நடைபெற்றது அலங்கரிக்கப்பட்ட தேரில் சுப்பிரமணியசுவாமி தம்பதி வள்ளி தெய்வானை சமேதமாக ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுவாமி பவனி வந்த அலங்கரிக்கப்பட்ட தேரினை ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து தேரை நிலை பெயர்த்தனர், அப்போது தேவை சுற்றி கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு தேரின் மீது உப்பு, மிளகு, பொரி ஆகியவற்றை இறைத்து சுவாமியை வணங்கி வழிபட்டனர். சிவசுப்பிரமணியசுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆலய பகுதியில் பவனி வந்து  பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தமிழகத்தில் வேறு எங்கும் கண்டிராத வகையில் தர்மபுரியில் மட்டுமே குமாரசாமி பேட்டை சிவசுப்பிரமணிய ஆலய தைப்பூச தேர் திருவிழாவில் பெண்கள் மட்டுமே தேரை வடம்பிடித்து இழுத்தது குறிப்பிடத்தக்க முக்கிய நிகழ்வு ஆகும். விழாவையொட்டி காலை முதலே பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அறக்கட்டளை சார்பில் 10, ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பக்தர்களையும் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன, தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் ஏராளமான போலீசார் பக்தர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்

கருத்துகள் இல்லை:

Post Top Ad