இதனைத் தொடர்ந்து பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சி அலுவலகம், கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (05.02.2025) நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். தருமபுரி மாவட்டம், கடத்தூர் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட 1 வது வார்டு புதுரெட்டியூர் சாலை பெருமாள் கோயில் தெரு மகேஸ்வரி நகரில் அம்ரூத் 2.0 ன் கீழ் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பூங்காவை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கடத்தூர் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட வடிவேல் நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், புதுரெட்டியூர் 10-வது வார்டு பகுதியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வடிகால் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு, இக்கோரிக்கை மனுவிற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். மேலும், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பையர்நத்தம் நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நியாய விலைக்கடையில் விநியோகிக்கப்பட்டு வரும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பரிசோதித்து, அதன் தரம் குறித்து கேட்டறிந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தரமாகவும் தங்கு தடையின்றியும் வழங்கிட வேண்டுமென பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நில அளவை தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (05.02.2025) நடைபெற்றது. இந்த ஆய்வின்போது, அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சின்னசாமி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் திருமதி.வள்ளி, கடத்தூர் தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் திரு.ம.விஜயசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக