சிறுவாணி இளைஞர் இலக்கிய திருவிழா-2025ல் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார் மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 பிப்ரவரி, 2025

சிறுவாணி இளைஞர் இலக்கிய திருவிழா-2025ல் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் இன்று பெற்றுகொண்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் தலைமையில் இன்று (17.02.2025) நடைபெற்றது. இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். 


இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 594 மனுக்கள் வரப்பெற்றன.


பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட மைய நூலகத்தின் சார்பில் சிறுவாணி இளைஞர் இலக்கிய திருவிழா-2025ன் கீழ் நடைபெற்ற இரண்டு நிமிட பேச்சாற்றால், நூல் அறிமுகம், இலக்கிய வினாடி வினா, உடனடி ஹைக்கூ, ஓவியப்போட்டி, விவாத மேடை, 6 நிமிட பேச்சுப்போட்டி, கணினி படம் உருவாக்கம், புக் ரிவியூ, ப்ராம்ட் என்ஜினியரிங் உள்ளிட்ட 10 தலைப்புகளில் நடைபெற்ற போட்டிகளில் முதல் பரிசாக ரூபாய் 5 ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூபாய் 4 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூபாய் 3 ஆயிரம் என வெற்றி பெற்ற 30 தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.20 இலட்சம் மதிப்பீட்டில் பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.


மேலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ஆர்.கவிதா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணி, மாவட்ட நூலக அலுவலர் திருமதி.கோகிலவாணி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad