பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த 3 நபர்களின் குடும்பத்தினர்களுக்கு உதவித்தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 பிப்ரவரி, 2025

பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த 3 நபர்களின் குடும்பத்தினர்களுக்கு உதவித்தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 3 நபர்களின் குடும்பத்தினர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற தலா ரூ.4.00 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் இன்று வழங்கினார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 3 நபர்களின் குடும்பத்தினர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற தலா ரூ.4.00 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி முன்னிலையில் இன்று (25.02.2025) வழங்கினார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் கிராமத்திலுள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 24.02.2025 அன்று பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் கிராமம், பூமிசமுத்திரத்தைச் சேர்ந்த திருமதி.திருமலர் (வயது 38) க/பெ. விஜயகுமார், திருமதி.செண்பகம் (வயது 35) க/பெ.மேகநாதன் மற்றும் திருமதி. திருமஞ்சு (வயது 33) க/பெ. தியாகு ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக தெரிவித்தார்.


மேலும், எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் இந்த வெடிவிபத்தில் உயிரிழந்த 3 நபர்களின் குடும்பத்தினர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வரப்பெற்ற தலா ரூ.4.00 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் வழங்கி, தனது ஆறுதலை தெரிவித்தார்.


மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும். இதுபேன்ற நிகழ்வுகள் இனி ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வே.சம்பத்குமார், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.கேத்ரின் சரண்யா, இ.ஆ.ப., திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி.அ.லலிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திரு.பாலகிருஷ்ணன், தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad