மை தருமபுரி அமைப்பின் சார்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக தருமபுரி மாவட்டத்தில் ஆதரவின்றி இறந்த நபர்களின் சடலங்களை நகராட்சி அனுமதி பெற்று காவல்துறையுடன் இணைந்து தங்கள் உறவாக எண்ணி நல்லடக்கம் செய்து வருகின்றனர். தருமபுரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெயர் விலாசம் தெரிந்தும் உறவினர்கள் யாரும் தேடி வராத சடலங்கள் மற்றும் பெயர் விலாசம் தெரியாத உடல்கள் என மொத்தம் ஆறு ஆண்களின் சடலங்கள், மற்றும் ஒரு பெண்ணின் சடலம் என ஏழு சடலங்களை மை தருமபுரி அமரர் சேவை அமைப்பினர் வெள்ளிக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்துள்ளனர்.
இந்த நிகழ்வில் தருமபுரி காவல் நிலைய காவலர் பாக்கியராஜ், மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், பொருளாளர் ஜலபதி ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், செந்தில், ஜெயசூர்யா, சண்முகம், பிரபு ஆகியோர் நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 135 ஆதரவின்றி இறந்த புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக