ஜக்கசமுத்திரம் கிராமத்தில் டிரான்ஸ்பார் உடைத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் கம்பி திருட்டு; மாணவர்கள் 3 பேர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 பிப்ரவரி, 2025

ஜக்கசமுத்திரம் கிராமத்தில் டிரான்ஸ்பார் உடைத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் கம்பி திருட்டு; மாணவர்கள் 3 பேர் கைது.


பாலக்கோடு அருகே  டிரான்ஸ்பார் உடைத்து  50 ஆயிரம் ரூபாய்  மதிப்புள்ள காப்பர் கம்பி திருட்டு - கல்லூரி மாணவர் உட்பட மூன்று பேர் கைது செய்து சிறையில் அடைப்பு.



தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த ஜக்கசமுத்திரம் கோடிக்கானூர் சாலையில் உள்ள மின்சார துறைக்கு சொந்தமான டிரான்ஸ்பார்மர் கம்பத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு ஆயில் கொட்டி கிடப்பதாக உதவி பொறியாளர் திவாகருக்கு கிடைத்த தகவலை அடுத்து, மின்சாரத் துறையினர்  சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது டிரான்ஸ்பார்மர் கம்பத்தில் இருந்து கீழே தள்ளி உடைக்கப்பட்டு, அதிலிருந்து ஆயில் மற்றும்  50 ஆயிரம் ரூபாய்  மதிப்புள்ள காப்பர் கம்பிகள் திருடப்பட்டது தெரிய வந்தது. 



இது குறித்து மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் உதவி பொறியாளர் திவாகர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த குற்ற சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை பாலக்கோடு டிஎஸ்பி மனோகரன் அவர்கள் தலைமையில் செல்போன் சிக்னலை வைத்து  தேடிவந்த நிலையில் வெள்ளிச்சந்தையைச் சேர்ந்த பழைய இரும்பு கடைக்காரர் முருகன், பந்தாரஅள்ளியை சேர்ந்த செல்வகுமார் மற்றும் கல்லூரி மாணவரான கவிமனு ஆகியோரை கைது செய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad