பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு நினைவு அஞ்சலி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு நினைவு அஞ்சலி.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு  கடந்த 2019 ம் ஆண்டு ஜம்முகாஷ்மீர் மாநிலம், புல்வாமா தாக்குதலில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த 40 சி.ஆர்.பி.எப். படை இராணுவ வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு டி.எஸ்.பி மனோகரன் கலந்து கொண்டு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உருவ படத்திற்க்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து முன்னாள் இராணுவ வீரர்கள், தர்மபுரி மாவட்ட சி.ஆர்.பி.எப்.ஜவான்ஸ் குருப் சங்கத்தினர், முன்னாள் முப்படை இராணுவ வீரர்கள் நல சங்கத்தினர், டாக்டர்  கலாம் பசுமை நல அறக்கட்டளை நிர்வாகிள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மலர் தூவி வீரவணக்கத்துடன்  அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad