பென்னாகரம் அருகே உள்ள பெத்தானூர் கிராமத்தில் சேர்ந்தவர் ராதா (53) இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் அரசு வழங்கும் 100 நாள் வேலை திட்டமும், வேலையில்லாத நாட்களில் கூலி வேலைக்கும் சென்று பிழைப்பு நடத்தி வருகிறார். இன்று வழக்கம் போல் தனது 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்றுள்ளார். பெத்தானூர் அருகே செல்லும் பொழுது, அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் லட்சுமி மற்றும் ராதா ஆகியோர் மீது மோதியது இதில் ராதா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இது குறித்து பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராதாவின் உடல் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக