தருமபுரி மாவட்டம் புட்டிரெட்டிபட்டி அருகே அதிகாலையில் ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். இவரது பிரேதத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தரப்பட்டது.
மொரப்பூர் ரயில் நிலைய காவலர் தேவராஜ், மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா செயலாளர் தமிழ்செல்வன் பொருளாளர் ஜலபதி ராஜா, அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், மருத்துவர் ஸ்ரீகாந்த், அருண் பிரசாத் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி தருமபுரி மின் தகன மையத்தில் நல்லடக்கம் செய்து அவரது அஸ்தியை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 127 ஆதரவற்றும், ஏழ்மையில் இறந்தோரின் புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர். ஆதரவற்றோர்களுக்கும் ஏழ்மையில் உள்ளோருக்கும் உறவாய் மை தருமபுரி அமைப்பினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக