தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளி குழுமங்களின் சார்பில் செயல்பட்டு வரும் வித்யாஷ்ரம் அகாடமியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 2025- ஆம் ஆண்டுக்கான ஐஐடி – ஜேஇஇ மெயின் தேர்வில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவன் சுரேந்திரா 99.67 சதவீதமும், மாணவி ஸ்ருதி 99.51 சதவீதமும், சைலேஷ் 98.58 சதவீதமும், ஜானவி 98.32 சதவீதமும், சித்திக் ஷாதிக் 97. 95 சதவீதமும், ஹன்சிகா 97.21 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும் தேர்வில் பங்கு பெற்ற தர்மபுரியைச் சேர்ந்த 28 மாணவ, மாணவிகளில் 14 பேர் 94.02 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவ, மாணவிகள் நமது நாட்டின் தலைசிறந்த ஐஐடி கல்லூரிகளில் சேர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களில் தலைவர் டி.என்.சி. மணிவண்ணன், தாளாளர் செல்வி மணிவண்ணன், துணைத் தலைவர் தீபக், செயலாளர் டாக்டர் ராம்குமார் ஆகியோர் பாராட்டி ரொக்க பரிசு மற்றும் பாராட்டு கேடயம் வழங்கி வாழ்த்தினார்.
இந்த நிகழ்வில் இயக்குனர்கள் ஷர்வந்தி தீபக், டாக்டர் திவ்யா ராம்குமார் மற்றும் கல்வி நிறுவனங்களின் டீன்கள் கௌசல்யா, சம்பத்குமார் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக