தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் முருகன் தலைமை வகித்தார் வட்ட செயலாளர் சிவகாமி வரவேற்றார். பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துதல் கால வரன்முறை ஊதியம், வாரிசு வேலை வாய்ப்பு உட்பட ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் நாகப்பன் பரிமளா வட்ட துணைத் தலைவர்கள், சரிதா, கிருஷ்ணன், மோகன் குமார் வட்ட பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக