பென்னாகரம் அருகே உள்ள நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி (46) கணவர் பெயர் ராஜமாணிக்கம். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் தனது ஊருக்கு அருகில் உள்ள, பொச்சாரம் பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில், விவசாய பணிக்கு போதிய ஆட்கள் கிடைக்காததால், விவசாய பணி செய்ய அங்கு சென்றுள்ளார்.
இயந்திரம் மூலம் துவரை அடிக்கும் இயந்திரத்தைக் கொண்டு பணி செய்துள்ளனர். அப்போது துவரை செடிகளை எடுத்து இயந்திரத்தில் வைக்கும் பொழுது, தவறுதலாக புடவை மாட்டி, இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட ஜெயக்கொடி பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
இது குறித்து தகவலின் பெயரில், பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, அரவை இயந்திரத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், விவசாய பணி மேற்கொள்ளும் பொழுது, அரவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிர் இழந்த சம்பவம் பென்னாகரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக