கம்பைநல்லூர் அருகே உள்ள வேதராம்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென வெடி விபத்து நடந்தது. தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைக்க முயற்சித்தனர். இந்த வெடி விபத்தில், அந்த தொழிற்சாலையில் வேலை செய்த 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
விபத்து நடந்த இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் இடத்தைப் பார்வையிட்டனர். தொழிற்சாலை பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றியதா?, எங்கே தவறு நடந்தது? போன்ற கோணங்களில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக