தர்மபுரி கலெக்டரிடம் ஜெர்தலாவ் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் மனு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 பிப்ரவரி, 2025

தர்மபுரி கலெக்டரிடம் ஜெர்தலாவ் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி பொதுமக்கள் மனு.

தர்மபுரிமாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியுடன் ஜெர்தலாவ் ஊராட்சியை இணைக்க  தமிழக அரசு அரசானை பிறப்பித்துள்ளது. இதனை கண்டித்து பொதுமக்கள் தொடர்  ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையில்,  இது குறித்து பாமக ஒன்றிய தலைவர் துரை தலைமையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் சதிஷிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


 இதில் 100 நாள் வேலை திட்டம் பாதிக்கப்படும், வீட்டு வரி, நில வரி அதிக அளவு உயரும் மேலும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதால் ஜெர்தலாவ் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க கூடாது தெரிவித்துள்ளனர்.


இதில் ஜெர்தலாவ், கோடியூர், திம்மம்பட்டி, சிக்கார்தனஅள்ளி, கணபதி கொட்டாய், செங்கோடபட்டி, மாதம்பட்டி,  உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர்   திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad