கடத்தூர் அருகே புட்டிரெட்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளியில் விளை யாட்டு போட்டிகள், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கலை, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு நடந்தது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவிற்கு தலைமையாசிரியர் யேசேந்திரா தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் ராஜாசேகர் வரவேற்றார், பள்ளி அளவில் சிறப்பிடம் மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி ஆசிரியர் முத்து, கணபதி, சிவாநிதி ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெங்கடாஜலபதி, பள்ளி மேலாண்மை குழு தலைவி சத்தியா முன்னிலை வகித்தனர், முதுகலை பட்டதாரி ஆசிரியர் சரவணன், பள்ளி ஆண்டு அறிக்கை வாசித்தார். சின்னதுரை, முருகேசன், ராமமூர்த்தி, புருஷோத்தமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், பள்ளி இருபால் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பள்ளியில் மாணவ மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக