பாலக்கோடு தீப்பொறியார் நகரில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 1101 பொதுமக்களுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 பிப்ரவரி, 2025

பாலக்கோடு தீப்பொறியார் நகரில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 1101 பொதுமக்களுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, தீப்பொறியார் நகரில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 1101 பொதுமக்களுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி தொழிலதிபர் எம்.ஜி. தீப்பொறி பெருமாள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


மாசி மாத அமாவாசையை ஒட்டி பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள  சிவன் கோயில்களில் நேற்றிரவு பக்தர்கள்  கண்விழித்து மகா சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள  அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றன.


மகா சிவராத்திரியை முன்னிட்டு 1101  பொதுமக்களுக்கு தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி தொழிலதிபர் எம்.ஜி. தீப்பொறி பெருமாள் அவர்கள்  தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேளாவள்ளி சேகர், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பாலகிருஷ்ணன், தொழிலபதிர்கள் முத்துராஜ், மாதையன், குமார், வக்கில் சின்னசாமி, கண்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad