வத்தல்மலையில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 பிப்ரவரி, 2025

வத்தல்மலையில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

A8--6.2%20%5Bphotoutils.com%5D%20(2)

தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.02.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், வத்தல்மலையில் அமுதகம் உணவு வளாகம் கட்டப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். தருமபுரி ஊராட்சி ஒன்றியம், என்.எஸ்.ரெட்டியூர், நல்லசேனஅள்ளி ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்கள்.  மேலும் நல்லசேனஅள்ளி ஊராட்சி, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறித்தும், அடிப்படை வசதிகன் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


தருமபுரி மாவட்டம், தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட என்.எஸ்.ரெட்டியூர் நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நியாய விலைக்கடையில் விநியோகிக்கப்பட்டு வரும் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பரிசோதித்து, அதன் தரம் குறித்து கேட்டறிந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தரமாகவும் தங்கு தடையின்றியும் வழங்கிட வேண்டுமென பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.


மேலும், தருமபுரி மாவட்டம், வத்தல்மலை அடிவாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2.95 இலட்சம் மதிப்பீட்டில் கால்வாய் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின்போது, தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.கலைவாணி, திருமதி.சத்யா, உதவி பொறியாளர் திரு.சீனிவாசன், உட்பட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad