போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்த புகார்களை இச்செயலியிலும், மாநில அளவிலான தொலைபேசி எண்.10581, அலைபேசி எண்.9498410581 புகார் தெரிவிக்கலாம். மேலும், தருமபுரி மாவட்ட அளவில் செயல்பட்டுவரும் வாட்ஸ்அப் எண். 63690 28922-ல் புகார் தெரிவிக்கலாம்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு (Drug Free Tamilnadu) - தமிழகத்திற்கான அலைபேசி செயலி குறித்து மாணவ, மாணவியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (20.02.2025) நடைபெற்றது.
மேலும், போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு (Drug Free Tamilnadu) - தமிழகத்திற்கான அலைபேசி செயலி குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடு மற்றும் துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசால் போதை பொருட்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்த புகார்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் தெரிவிக்கும் வண்ணம் போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு (Drug Free Tamilnadu) என்ற அலைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இச்செயலி மூலம் பெறப்படும் புகார்களை கண்காணிக்க மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளரை மாவட்ட அளவில் தொடர்பு அலுவலராக நியமனம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இப்புகார்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புகார் தெரிவித்தவரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும் புகார்களை மாநில அளவிலான தொலைபேசி எண்.10581 மற்றும் அலைபேசி எண்.9498410581 புகார் தெரிவிக்கலாம். தருமபுரி மாவட்ட அளவில் செயல்பட்டுவரும் வாட்ஸ்அப் எண்.6369028922-ல் புகார் தெரிவிக்கலாம்.
எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் இந்த அலைபேசி செயலி குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தருமபுரி மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் கல்லூரி கல்வி இயக்கக மண்டல இணை இயக்குநர் திருமதி.சிந்தியா செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதிசந்திரா, துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன், உதவி ஆணையர் (கலால்) திருமதி.நர்மதா, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.செல்வம் உள்ளிட்ட தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக