மாரண்டஅள்ளியில் ஸ்ரீ அங்காளம்மன் திருவிழாவை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 பிப்ரவரி, 2025

மாரண்டஅள்ளியில் ஸ்ரீ அங்காளம்மன் திருவிழாவை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி.

 

தர்மபுரி மாவட்டம், மாரண்ட அள்ளி ஸ்ரீஅங்காளம்மன் கோவில் திருவிழா 75 ஆண்டுகளுக்கு மேலாக  நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் கொடியேற்றத்துடன் தொடங்கிய  இத்திருவிழாவானது தொடர்ந்து பதினோரு நாட்களுக்கு நடைபெறும். 

மேலும் ஐந்தாம் நாள் அம்மனுக்கு திருக்கல்யாணம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்படும். இந்த பதினோரு நாட்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு தினசரி மாரண்டஅள்ளியின் முக்கிய வீதிகளான சத்திரம் தெரு, வெள்ளிச்சந்தை மெயின் ரோடு, கடைவீதி, பஸ் நிலையம், பை-பாஸ் ரோடு வழியாக அம்மன் வீதி உலா நடைபெறும். 

இந்த ஊர்வலத்தின் போது  பூத வாகனம், சிம்ம வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம், ஆதிசேஷ வாகனம்,காமதேனு வாகனம், நரி வாகனம், அன்னபச்சி வாகனம்  உள்ளிட்ட வாகனங்களில் தினசரி ஊர்வலமாக வந்து பொதுமக்களுக்கு அம்மன் காட்சியளியளப்பார்.  மேலும் முக்கிய நிகழ்வாக இந்த அங்காளம்மன் திருவிழாவின் போது நடைபெறும் மாட்டு சந்தைக்கு அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரும்பாலான நாட்டு மாடுகளும் பசு மாடுகளும் கொண்டுவரப்படும். 


நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் பக்தர்கள் காளிவேடம், அர்த்தனாரிஸ்வரர் வேடம், முருகன் வேடம் உள்ளிட்ட சாமி வேடங்கள் தரித்து மயானத்தை அடைந்து பெரியாண்டிச்சி அம்மனுக்கு நேர்த்தி கடன் செய்து வழிபட்டனர். இவ்விழாவில் 50 ஆயிரத்திற்க்கு  மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


பாலக்கோடு டி.எஸ்.பி மனோகரன், இன்ஸ்பெக்டர்கள்  சுப்ரமணி, பாலசுந்தரம்  ஆகியோர்  தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad