தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், நாட்டு நலப்பணி திட்டம் முகம், ரெட்டியூர், எர்ரனஹள்ளியில் நடந்து வருகிறது. நேற்று எர்ரணஹள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில், அரசு கல்லூரி மாணவ, மாணவியர்கள், 90 பேர் பள்ளி மற்றும் அதன் சுற்றுப்புறத்தை தூய்மை செய்தல், மரக்கன்று நடுதல் மற்றும் சாலை பகுதிகளை தூய்மை செய்யும் சேவையில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து, கல்லூரி சார்பில், பள்ளியில் உள்ள மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதில், பரிசோதனை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும், பள்ளி வளாகம் முழுவதும் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.
இதில், கல்லூரியின் என்.எஸ்.எஸ்., அலுவலர் அன்பரசு, அரசு பள்ளி தலைமை ஆசிரியை மலர்க்கொடி, அரசு மருத்துவர் இளங்கோ உட்பட, மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக