தருமபுரி மாவட்டத்தின் 46வது புதிய ஆட்சித்தலைவராக திரு.ரெ.சதீஸ்.,இ.ஆ.ப அவர்கள் கடந்த திங்கள் அன்று பதவி ஏற்றுக் கொண்டார். தருமபுரி மாவட்டத்தில் பல மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் தினந்தோறும் உணவு, ஆதரவற்று இறந்த புனித உடல்கள் நல்லடக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல், நகராட்சியுடன் இணைந்து தூய்மை பணி என் பல சேவைகளை செய்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவர் அவர்களை மை தருமபுரி சேவை அமைப்பினர் மரியாதை நிமித்தமாக சந்தித்து தங்கள் சேவை பணி பற்றி தெரிவித்தனர். பல மனிதநேயமிக்க சேவைகளை தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து செய்ய வாழ்த்துக்களை தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் அவர்கள், இளைஞர்களை ஊக்குவித்து நம் தருமபுரி மாவட்டத்தை தமிழகத்தின் முதன்மை மாவட்டமாகவும், பசுமை நிறைந்த மாவட்டவமாக மாற்ற ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மை தருமபுரி அமைப்பினர் உறுதுணையாக இருப்போம் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பு நிகழ்வில் மை தருமபுரி அமைப்பின் கௌரவத் தலைவர் CKM ரமேஷ், நிறுவனத் தலைவர் முனைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் அருணாசலம், கிருஷ்ணன், அருள்மணி, செந்தில் முஹம்மத் ஜாபர், சையத் ஜாபர் ஆகியோர் வாழ்த்துக்களை கலந்துகொண்டு மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக