தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த விவசாய தம்பதியரின் 4 வயது சிறுமி, நேற்று மதியம் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த (ராஜா.60) என்ற முதியவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பயந்து போன அச்சிறுமி அழுது கொண்டே வீட்டிற்க்கு சென்று பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
உடனடியாக மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து முதியவரை கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் முதியவரிடம் விசாரனை மேற்கொண்டு வருகிறார். சிறுமியிடம் முதியவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக