மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நல்லானூர் பகுதியில் அமைந்துள்ள ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. ஜெயம் கல்லூரியின் வேலைவாய்ப்பு துறையின் சார்பாக தனியார் வேலை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் தலைமை வகித்தார். குழுமத்தின் செயலாளர் காயத்ரி கோவிந்த் முன்னிலை வகித்தார். நிகழ்விற்கு ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சி.பரஞ்சோதி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்விற்கு ஓசூர் பிரீடம் ஆப்தலமிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் கோ.கண்ணாரயிரம், மனிதவள மேலாளர்கள் ரா.பிருந்தா ஸ்ரீ, மா.தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு மாணவர்களை நேர்காணல் செய்து பணி ஆணைகளை வழங்கினர்.


நிறைவாக கல்லூரியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர்  முனைவர் அ.இம்தியாஸ் நிகழ்வில் நன்றி கூறினார். நிகழ்வின் முன்னதாக கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நா.நாகராஜ் வரவேற்று பேசினார். நிகழ்வில் கல்லூரியின் நூலகர் சி.ஆறுமுகம்  பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad