பாலக்கோடு வேளாண்மை விற்பனை மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூட வாளகத்தில் சுகாதார சீர்கேடு - நோய்பரவும் அபாயம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 பிப்ரவரி, 2025

பாலக்கோடு வேளாண்மை விற்பனை மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூட வாளகத்தில் சுகாதார சீர்கேடு - நோய்பரவும் அபாயம்.

1002436907

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடம் நடைபெற்று வருகின்றது. சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவிக்கக் கூடிய காய்கறிகள் பழங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யவும், காய்கறி பழங்களை பதப்படுத்தவும் அரசு சார்பில் 10மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டில் உள்ளது.

1002436922

மேலும் வேளாண் விற்பனை கூட வாளகத்தில் குப்பை பிளாஸ்டிக் கழிவுகள், அழுகியபழக் கழிவுகள், காய்கறி கழிவுகள் உள்ளிட்டை கொட்டப்பட்டு பல மாதங்களாக தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், புதர் மண்டி காட்சி அளிக்கிறது,இப்பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய், குப்பை தொட்டிகள் போன்ற எந்த ஒரு சுகாதார பணிகளும் நடைபெறாமல், சீர்கேட்டால் பொதுமக்கள் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1002436928

எனவே  மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad