தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் பாலக்கோடு கேசர்குழி சாலை, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வந்தன, முடிவுற்ற சாலைகளின் தரம் குறித்து நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய சென்னை இயக்குநர் பொறியாளர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது சாலை பணிகளின் தரம், உரிய நீளம், அகலம் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார், தருமபுரி கோட்டபொறியாளர் நாகராஜி, சேலம் தரக்கட்டுப்பாடு கோட்டபொறியாளர் கதிரேசன், உதவிப் பொறியாளர் மன்னர்மன்னன், பாலக்கோடு நெடுஞ்சாலை துறை உதவிப் பொறியாளர் ரஞ்சித் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக