பென்னாகரம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையுடன் தேசிய பங்குச் சந்தை நிறுவனம் இணைந்து கல்வி மூலம் பங்கு சந்தை முதலீட்டாளர்களை மேம்படுத்துதல் எனும் தலைப்பில் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடத்தியது.
இந்நிகழ்விற்கு வணிகவியல் துறைத் தலைவரும் கருத்தரங்க செயலாளருமான முனைவர் கோ.வெங்கடாசலம் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்கள். தொடர்ந்து கருத்தரங்க செயலாளர் முனைவர் க.கண்ணுச்சாமி அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்துவைத்துப் பேசினார்கள். முனைவர் K.பிரபாகரன், இயக்குநர், Edify கோயம்புத்தூர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பங்குச் சந்தையில் மூலதனத்தினை எவ்வகையில் பாதுகாப்பாக முதலீடு செய்வது என்பது பற்றியும், காலகட்டத்திற்கு தகுந்தார் போல் என்ன வகையான முதலீடுகளை மாணவப் பருவத்தில் மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பற்றிய வழிமுறைகளைத் தெளிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சின் இறுதியில் முனைவர் M.முன்னா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக