பாப்பாரப்பட்டி அருகே மோட்டுப்பட்டி கிராமத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 5 வீடுகள் இடிந்து விழுந்து கல்லூரி மாணவி படுகாயமடைந்தார். இந்நிலையில் மோட்டுப்பட்டி கிராமத்துக்கு தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான தடங்கம் சுப்பிரமணி நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது வீடுகள் இடிந்த ஐந்து குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கினார். பாலக்கோடு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கருணாநிதி, மாவட்ட பொருளாளர் தங்கமணி, பொதுக்குழு உறுப்பினர் நடராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கெளதம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஜி.கே.மணி எம்எல்ஏ உணவுப்பொருட்கள் உதவி.
இதே போல் விபத்து நடந்த மோட்டுப்பட்டி கிராமத்துக்கு பாமக கௌரவத்தலைவர் பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மற்றும் நிதி ஆகிய நிவாரண உதவிகளை வழங்கினார். மாவட்ட தலைவர் செல்வகுமார், பென்னாகரம் தொகுதி பொறுப்பாளர் சுதா கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக