இந்நிலையில் கடந்த 10ம் தனது மகள் வைசாலியை மாரண்டஅள்ளி அருகே தேக்லான்கொட்டாய் கிராமத்தில் உள்ள கோவிந்தசாமி மகன் தாமோதரன் (வயது. 29) என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த வைசாலி நேற்று முன்தினம் மதியம் வீட்டில் உள்ள உத்தரத்தில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வீரம்மாள் சம்பவ இடத்திற்க்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக சிறுமியின் தாய் கொளந்தையம்மாள், கனவர் தாமோதரன் ஆகியோரை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
கட்டாய திருமணம் செய்து வைத்ததால் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக