பென்னாகரம் அருகே உள்ள சிகரலஅள்ளியைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (45) இவர் ஆந்திராவில் சிப்ஸ் கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஞானசேகரின் அண்ணன் மகன், அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணை கூட்டி சென்று காதல் திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு, இருவரும் மேஜர் என்பதால், காவல்துறையினர் விசாரணை செய்து பின்பு அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக, பெண் வீட்டார் ஞானசேகரின் குடும்பத்தாருடன் தகராறு செய்துள்ளனர். இது தொடர்பாக ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, சமாதானமாக செல்லும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து தங்கராஜ் குடும்பத்தினர், ஞானசேகரன் குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஆந்திராவில் இருந்து ஞானசேகரன் சிகரல அள்ளி வந்துள்ளார், இதை அறிந்த தங்கராஜ் குடும்பத்தினர், ஞானசேகரின் வீட்டின் கதவை உடைத்து, வீட்டில் இருந்த ஞானசேகரை தாக்கியுள்ளனர். இதில் ஞானசேகரின் தலையில் பலத்த காயமடைந்தது பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு, தலையில் 5 தையல்கள் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பான புகாரின் பேரில், தங்கராஜ், இந்திரா, தங்கராஜ் மகன், கோவிந்தராஜ், மற்றும் சாந்தி ஆகியோர் மீது ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தங்கராஜை கைது செய்துள்ளனர், மற்றவர்கள் தலைமுறைவாக உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக