தர்மபுரி வனக்கோட்டம் பென்னாகரம் அருகே உள்ள பதன வாடி காப்புக்காடு, கோடுபாய் கிணறு வனப்பகுதியில் யானை ஒன்று கடந்த ஒன்றாம் தேதி அன்று மர்மமான முறையில் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தது.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில் மாவட்ட வன அலுவலர், கால்நடை மருத்துவர் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்வதில் யானை வேட்டையாடப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு வன உயிரின சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் வனப்பகுதிகளில் நடைபெற்ற யானை வேட்டையை தடுக்க தவறியதாக நெருப்பூர் பகுதியில் பணியாற்றி வரும் வனவர் சக்திவேல் மற்றும் ஏமனூர் பகுதியில் பணியாற்றி வரும் வனக்காப்பாளர் தாமோதரன் ஆகிய இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: யானை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 3 தனிக்குழு அமைத்து உதவி வன பாதுகாவலர் தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக