தருமபுரி, மார்ச் 31: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மொரப்பூர் காப்புக்காடு வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி அருகிலுள்ள கிராமங்களுக்கு வருவது வழக்கம்.
இன்று விடியற்காலை 4 மணியளவில், மொரப்பூர் காப்புக்காட்டில் இருந்து 2 வயது ஆண் புள்ளிமான் ஒன்று, காடுசெட்டிபட்டி கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் தேடி வந்தது. இதனை கவனித்த தெருநாய்கள் மானை துரத்திச் சென்று கடித்து குதறியதில், புள்ளிமான் துடித்துக்கொண்டே உயிரிழந்தது.
தகவலறிந்த பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ், வன மருத்துவர் மற்றும் வன காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த மானை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், மானின் உடல் அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. புள்ளிமான் உயிரிழந்த இந்த சம்பவம் பொதுமக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக