தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள எமனூர் பதனவாடி காப்புக்காடு கோடு பாய் கிணறு வனப்பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி அன்று ஆண் யானை ஒன்று மர்மமான முறையில் உடல் சிதைக்கப்பட்டு தீட்டு எரித்து உயிரிழந்து கிடந்தது இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில் வனத்துறையினர் கால்நடை மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் யானையின் உடலை பரிசோதனை செய்த போது யானை வேட்டையாடப்பட்டு தந்தம் எடுத்துச் சென்று இருப்பது தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் வேட்டையை தடுக்க தவறியதாக பணியில் இருந்த வனவர் சக்திவேல் வனக்காப்பாளர் தாமோதரன் ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்து மாவட்ட வனத்துறை அதிகாரி உத்தரவிட்டு யானையை வேட்டையாடிய நபர்களை கண்டுபிடிக்க ஐந்து தனிக்குழு அமைக்கப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் வனக்குழுவினர் தீவிர விசாரணைக்கு பின்னர் நேற்று இரவு நேரத்தில் யானையை சுட்டுக்கொன்று தந்தத்தை வேட்டையாடி கடத்திச் சென்றதாக கொங்கரப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் விஜய் குமார் 23 . அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் கோவிந்தராஜு 54 மற்றும் கர்நாடகா எல்லைப் பகுதியில் உள்ள செங்கப்பாடி கோவிந்தபாடி பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் தினேஷ் 26 ஆகிய மூன்று நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் யானையை சுட்டு தீட்டு எரித்து தந்தத்தை எடுத்ததாக மூவரும் விசாரணையில் ஒப்புக்கொண்டனர்.
அதன் பின்னர் அவர்களிடமிருந்து இரண்டு யானைத் தந்தங்கள் மற்றும் இரண்டு நாட்டுத் துப்பாக்கி வெடி மருந்துகள் பால்ராஜ் தூண்டுதல் கத்தி ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்து வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் யானைகளை துப்பாக்கியால் வேட்டையாடுதல், தந்தங்களை அகற்றுதல், தந்தங்களை வைத்திருப்பது மற்றும் வர்த்தகம் ஆகிய குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட 3 நபர்கள் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களை பிடிக்க தனிப்படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக