பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 7-வது பட்டமளிப்பு விழா துவங்கியது, முதலில் முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினருடனான பட்டமளிப்பு விழா அணிவகுப்பு மிகவும் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து விழா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் பட்டமளிப்பு விழா துவங்கியது. மேன்மை தங்கிய விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் முனைவர் ஜா. பாக்கியமணி அவர்கள் வரவேற்று பேசினார்.
பின்னர் பட்டதாரிகளுக்கான சான்றிதழ்களை அனைத்துத் துறை மாணவ-மாணவியர்களின் பெயரை வாசிக்க முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர் சான்றிதழ்களை வழங்க ஒருவர் பின் ஒருவராக பட்டம் பெற்றனர். இளநிலை பட்டதாரிகள் 244 பேரும், முதுநிலை பட்டதாரிகள் 55 பேருமாக மொத்தம் 299 மாணவ மாணவியர்கள் பட்டம் பெற்றனர்.
பட்டமளித்து விழா பேருரையை தலைமை விருந்தினரும், சேந்தமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வருமான முனைவர் தி.பாரதி அவர்கள் வழங்கினார்கள். சிறப்பு விருந்தினர் தமது உரையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாளில் இந்த பட்டமளிப்பு விழா நடப்பது மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும் என இந்நிகழ்விற்கு மகுடம் சூட்டினார்.
பட்டம் பெற்றவர்களுக்கு; தங்களின் வாழ்நாள் முழுவதும் பயன்பெறும் நல்ல பல அறிவுரைகளை தமது சொந்த அனுபவத்திலிருந்து வழங்கி அனைவரையும் சிந்திக்க வைத்தார்கள் என்பது பெருமைக்குரியது. இறுதியில் - நாட்டுபண் இசைக்க விழா இனிதே நிறைவெய்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக