தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் கோகுல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்தச் சூழலில், ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோயில் தெருவில், கையில் பிளாஸ்டிக் கவர் வைத்திருந்த ஒரு வாலிபர், போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்றார். சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, அவர் ஸ்ரீ புதூர் பகுதியைச் சேர்ந்த பச்சியப்பன் (25) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக