கோடைக்காலம் தொடங்குவதற்குமுன்பே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து, பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்த சூழலில், பொதுமக்களின் தாகம் தீர்க்க அதிமுக சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அறிவுறுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, காரிமங்கலம் நகர கழகம் மற்றும் காரிமங்கலம் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி காரிமங்கலம் கழக அலுவலகத்தின் முன்பு சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணி மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நகர செயலாளர் காந்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் காவேரி, முன்னாள் சேர்மேன் மாணிக்கம் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக