தர்மபுரி மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.ஆர். முருகன், ஜெயலலிதா பேரவை மாநில துணைத்தலைவர் பாலு, மாவட்டத் துணைச் செயலாளர் சங்கீதா, மாவட்ட பொருளாளர் மணிமேகலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் பார்த்திபன் வரவேற்றார். கூட்டத்தில் கட்சியின் தலைமை நிலைய செயலாளரும், மாவட்ட செயலாளருமான டி.கே. ராஜேந்திரன் கலந்துகொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினார். தர்மபுரி மாவட்டத்திற்கு அடுத்த வாரம் தரும் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, வருகிற சட்டமன்ற பொதுத் தேர்தலில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தீவிர களப்பணியாற்றுவது, தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற் பூங்கா அமைக்கும் பணிகளை விரைவு படுத்த வேண்டும், காவிரி உபரி நீர் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்.
கோடை காலம் நெருங்குவதால் மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் சாம்ராஜ், பாஸ்கர், பெரியசாமி, கணேசன், கருணாகரன், தங்கமணி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக