பாலக்கோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் லாரி மீது மோதியதில் ஓசூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் உட்பட 3 பேர் உயிரிழப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 5 மார்ச், 2025

பாலக்கோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் லாரி மீது மோதியதில் ஓசூர் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் உட்பட 3 பேர் உயிரிழப்பு.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள அலசநத்தம் பகுதியை சேர்ந்தவர், அதிமுக முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் முனிகிருஷ்ணன் (50) இவர்  தனது இன்னோவா சொகுசு காரில் அதே பகுதியை சேர்ந்த  நண்பர்களான சீனிவாச ரெட்டி (47), பசவராஜ் (38) மஞ்சுநாத் (47),  சந்திரப்பா (50) ஆகியோருடன் நேற்று ஓகேனக்கல் சென்று விட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு ஓசூர் நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தனர்.


சொகுசு காரை பசவராஜ் ஓட்டி வர முனிகிருஷ்ணன் முன்பக்க இருக்கையிலும், மற்றவர்கள் காரின் பின்புற இருக்கையிலும் அமர்ந்து சென்றனர். ஜிட்டாண்டஅள்ளி பிரிவு சாலை அருகே சென்று  கொண்டிருந்த போது  சாலையின் தடுப்புச் சுவரில் மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து  சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது  வேகமாக மோதியது.


இதில், முனிகிருஷ்ணன்  சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மற்றவர்கள் பலத்த காயமடைந்தனர். பலத்த காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம்  பாலக்கோடு அரசு ஆஸ்பத்ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி  பசவராஜ் மற்றும்  சீனிவாசரெட்டி ஆகியோர்   உயிரிழந்தனர். 


இந்த விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தினை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், துணை போலீஸ் சுப்பிரண்டு மனோகரன், இன்ஸ்பெக்டர் சுப்ரமணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு விபத்து குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.


தடுப்பு சுவரில் மோதி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad