தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பைபாஸ் கூட்ரோட்டில் பாங்க் ஆப் பரோடா புதிய கிளை துவக்க விழா புதுச்சேரி பிராந்திய தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாதப்பன், ஜெர்தலாவ் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், தொழிலதிபர்கள் ரங்கநாதன், அரிமா சரவணன், பொன்னுசாமி, வீரமணி, பாலகிருஷ்ணன், பிரித்திவிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுநிலை மேலாளர் விக்னேஷ்பாபு வரவேற்று பேசினார்.
ஐ.வி.டி.பி.தொண்டு நிறுவன நிறுவனர் மற்றும் தலைவர் குழந்தை பிரான்சிஸ், சென்னை மண்டலத் தலைவர் மற்றும் பொது மேலாளர் சரவணகுமார்,ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன்வெட்டி, குத்து விளக்கு ஏற்றி புதிய வங்கி கிளையை துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினர். கிளை மேலாளர் சிலம்பரசன் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தொழிற்சங்க தலைவர் முருகேசன், முன்னாள் அதிமுக நகர செயலாளர் சங்கர் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக